பெரம்பலூரில் தொடர்ந்து மூன்று நாள்களில், செவ்வாய்க்கிழமை காலை பெய்த மழையின் அளவு 73.2 மிமீ என பதிவானது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 29–ஆம் தேதி நள்ளிரவு முதல் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

முதல்நாள் இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையின்போது, கோனேரிபாளையத்தில் மின்னல் தாக்கியதில் 2 பசுமாடுகள் மடிந்தன. வடக்குமாதவி கிராமத்தில் செல்வராணி என்பவரின் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

இரண்டாவது நாளான திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு ஆரம்பித்த மழை தொடர்ந்து 35 நிமிடம் நீடித்து.

மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு பெய்த மழை 7 மணி வரை இடி, மின்னலுடன் அடித்து விலாசியது.

இதனால் பெரம்பலூர் அரணாரை, துறைமங்கலம், நெடுவாசல், கௌல்பாளையம், செஞ்சேரி, பாளையம், குரும்பலூர், அம்மாபாளையம், இலாடபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் உழவு மற்றும் விதைப்பு போன்ற வேளாண்மை களப்பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம்:

பெரம்பலூர் – 28.2 மி.மீ.,

பாடாலூர் - 27 மி.மீ.,

செட்டிக்குளம் – 18 மி.மீ.,

மொத்தமழை அளவு - 73.2 மி.மீ.