Asianet News TamilAsianet News Tamil

"தமிழகத்தில் 7 ஆறுகள் மாசடைந்துள்ளன" - மத்திய அரசு தகவல்!!

7 rivers are unclean in tamil nadu
7 rivers are unclean in tamil nadu
Author
First Published Aug 8, 2017, 5:27 PM IST


மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, தமிழகத்தில் உள்ள ஆறுகளில் 7 ஆறுகள் மாசடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர், தமிழகத்தில் உள்ள ஆறுகளில் காவிரி, பவானி, பாலாறு, சரபங்கா, தாமிரபரணி, மணிமுத்தாறு, வசிஷ்டா ஆகிய 7 ஆறுகளும் மாசடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மக்களவையில் சுற்றுச்சூழல் அமைச்சகம் மேற்கொண்ட 7 நதிகளும் மாசடைந்ததாக அறிவித்திருந்தது.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், நதியில் கழிவுகளை கலக்கும் ஆலைகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த வருடம் கூறியிருந்தார்.

ஆனால், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும், அந்த 7 நதிகளும் இன்னும் மாசடைந்த நிலையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆறுகள் மணலாக காட்சியளிக்கும் இந்த நேரத்திலும், தமிழகத்தின் முக்கிய நதிகளாக விளங்கும் காவிரி, பாலாறு, தாமிரபரணி ஆகிய நதிகள் மாசடைந்து வருகிறது. இதனை சரி செய்வதிலும் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios