சேலம்

சேலத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடைச் செய்யப்பட்ட 600 கிலோ பிளாஸ்டிக் கை-பைகளை நகராட்சி அலுவலர்கள் சோதனையின்போது பறிமுதல் செய்தனர். தங்களது சோதனை தொடரும் என்று அவர்கள் கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கை-பைகளை விற்பது சட்டப்படி குற்றமாகும். மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சோதனைகள் தொடரும் என்றும் நகராட்சி அலுவலர்கள், கடை உரிமையாளர்களை எச்சரித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.