முக்கிய துறைகளை சேர்ந்த 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி..!
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் முக்கிய துறைகளை சேர்ந்த 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில்;-
* வேளாண் துறை ஆணையராக இருந்த எல்.சுப்பிரமணியன் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* மாற்று திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
* நில நிர்வாகத்துறை ஆணையர் எஸ்.நாகராஜன் மாற்று திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* மீன்வளத்துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி நில நிர்வாகத்துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சமூக நலத்துறை முதன்மை செயலாளராக இருந்த சுஞ்சோங்கம் ஜாதக் சிரு மீன்வளத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* தமிழ்வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக இருந்த செல்வராஜ், சாலை வழி திட்டம் 2-ன் திட்ட இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.