குட்நியூஸ்.. மே 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் நடைபெற இருப்பதால் மே -5ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை சித்திரைத் திருவிழா
மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வானது மே -5ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி. டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தில் பாஸ் வழங்குவதில் கடந்த ஆண்டு குளறுபடிகள் ஏற்பட்டது. எனவே எந்தவொரு அதிகாரியும் பாஸ் இல்லாமல் கோவிலுக்குள் யாரையும் உள்ளே விடக்கூடாது. இந்த நிலையில் கள்ளழகர் எழுந்தருள கூடிய வைகை ஆற்று பகுதியில் மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர், மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாவட்டத்திற்கு விடுமுறை
கடந்த ஆண்டு விழாவின் போது முறையான ஏற்பாடுகள் இல்லாத நிலையில் இரு பக்தர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு்உயிரிழந்த நிலையில் இந்த ஆண்டு விழாவிற்கான முன்னேற்பாட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் வரும் 5ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக உள்ளூர் விடுமுறை அளிப்பதாகவும் , பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விழாவிற்கு வருகை தருவதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் , மேலும் பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி சுவாமி தரிசனம் செய்வதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து செயல்படுத்தும் எனவும் தெரிவித்தார்
இதையும் படியுங்கள்
சித்திரை திருவிழா; யாராக இருந்தாலும் பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி - ஆய்வு கூட்டத்தில் அதிரடி