Asianet News TamilAsianet News Tamil

திருடர்கள் ஜாக்கிரதை...! சென்னை பூக்கடையில் 52 கண்காணிப்பு கேமராக்கள்...! 

52 surveillance cameras have been set up in Chennai for the Deepavali festival.
52 surveillance cameras have been set up in Chennai for the Deepavali festival.
Author
First Published Oct 12, 2017, 9:28 PM IST


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை பூக்கடை பகுதியில் 52 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன கேமராக்கள் செயல்பாட்டை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏகே விசுவநாதன் தொடங்கி வைத்தார். 

சென்னை பூக்கடை சரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புதிய சிக்னல் பேஸ் ரெகக்னீசிங் தொழில் நுட்பம் அடங்கிய சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.   

அதிக அளவில் மக்கள் கூடும் பகுதியில் இந்த புதிய தொழில் நுட்பம் அடங்கிய சிசிடிவி கேமராக்கள்  பொறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் விஸ்வநாதன் பேசுகையில், இந்த தொழில் நுட்பம் மூலம் கண்காணிப்பு பகுதியில் நுழையும் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும் எனவும், புதிய மற்றும் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

மாறு வேடத்தில் வந்தாலும் போலிசாருக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பியதும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். 

இதில் காவல்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios