Asianet News TamilAsianet News Tamil

நூதன முறையில் கடத்திவரப்பட்ட 52 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் - வருவாய் புலனாய்வுத்துறை அதிரடி...

52 kilogram gold seized from gujrat
52 kilogram gold seized from gujrat
Author
First Published May 21, 2017, 9:27 PM IST


குஜராத் மாநிலத்தில் கப்பலில் கடத்தி வரப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 52 கிலோ தங்க கட்டிகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து முந்த்ரா நகரில் உள்ள துறைமுகத்துக்கு வரும் கப்பலில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த கப்பலில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, உலோகச் சட்டங்களால் மூடப்பட்டு கொண்டுவரப்பட்ட முட்டைகள் வைக்கும் பிளாஸ்டிக் அடைப்பான்களை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அவற்றில் பெருமளவில் தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. பின்னர், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 52 கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், முட்டை குஞ்சு பொரிப்பான் இயந்திரத்தை அனுப்பிய நிறுவனம், அதனை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஆகியவற்றின் முகவரிகளைக் கொண்டு மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios