51 arrested in pudhukottai due to jallikattu

விராவிமலையில் போலீசாரை கல்வீசி தாக்கிய வழக்கில் 51 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த அம்மன் குளம் கிராமத்தில் ஜல்லிகட்டு நடத்த அனுமதிகோரி மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதிகோரி இருந்துள்ளனர்.

ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக கிராம மக்கள் நேற்று இரவு சென்னை மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து செல்லும் படி எச்சரித்த்தால் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.

அப்போது அவ்வழியே வந்த அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதில் நான்கு பேருந்துகள் சேதமடைந்தன. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் லேசான தடியடி நடத்திய போது காவல்துறையினர் மீதும் பொதுமக்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். இதனால் ஒருசில போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

காவல்துறையினர் மீது கல்வீசி தாக்கியது தொடர்பாக அம்மன் குளத்தை சேர்ந்த 51 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

மேலும் புதுகோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் லோகநாதன் கூறுகையில், இதுவரை 51 பெற மட்டுமே கைது செய்யபட்டுள்ளதாகவும் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.