பழனி

அரசு பணிமனை அதிகாரிகள், நடத்துநர் அளித்த பழைய 500, ஆயிரத்தை செல்லாது என்று வாங்க மறுத்ததால் நடத்துநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி இரயில்வே பீடர் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை இருக்கிறது.

இந்த பணிமனையின் கட்டுப்பாட்டில் இயக்கப்படும் பேருந்துகளின் நடத்துநர்கள் ஞாயிற்றுக் கிழமை அன்று, பேருந்தில் பயணிகளிடம் இருந்த தாங்கள் பெற்ற மொத்த தொகையினை பணிமனை அதிகாரிகளிடம் கொடுத்தனர்.

அப்போது அவர்கள் கொடுத்த தொகை ரூ.500, ரூ.1000 நோட்டுகளாக இருந்ததால் அதிகாரிகள் அதனை வாங்காமல் மறுத்துள்ளனர்.

இதையடுத்து அந்த நோட்டுகளுடன் பணிமனை நுழைவு வாயிலுக்கு வந்த நடத்துநர்கள், பணிமனை அதிகாரிகளின் இந்த செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிமனை அதிகாரிகள், நடத்துநர்களிடம் இருந்தே பணத்தை வாங்க மறுக்கின்றனர். இந்த தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும், எங்களுக்குத் தரும் நோட்டுகளைத் தான் நாங்கள் தர முடியும். இன்னும் எங்கேயேயும் இயல்பு நிலை திரும்பாமல் இருக்கும்போது அதிகாரிகள் இவ்வாறு செய்வது ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.