Asianet News TamilAsianet News Tamil

2000 கிலோ நாய்க்கறிக்கு நடுவே...ஓட்டலில் பிடிபட்டது கெட்டுப்போன “இந்த கறி”..!

நாய்க்கறி விவகாரம் அடங்குவதற்குள் தற்போது மதுரையில் மீண்டும் 500 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
500 kg bad condition waste meat in madurai
Author
Chennai, First Published Nov 21, 2018, 4:05 PM IST

நாய்க்கறி விவகாரம் அடங்குவதற்குள் தற்போது மதுரையில் மீண்டும் 500 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

மதுரை திருமங்கலத்தில் நகராட்சி சுகாதார அலுவலர் சீனிவாசன் தலைமையிலான குழு திடீரென பல உணவகங்களில்ஆய்வு மேற்கொண்டது.அப்போது, முகமது ராஜா என்பவருக்கு சொந்தமான கடையில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி 300 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதனை கண்டு அதிர்ந்து போன அதிகாரிகள் இதே போன்று வேறு கடைகளிலும்  உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர்.

500 kg bad condition waste meat in madurai

அப்போது மேலும் பல கடைகளில் இருந்து, கெட்டுப்போன ஆட்டிறைச்சி கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக சென்னை எழும்பூரில் 2000 கிலோ  நாய்க்கறி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது கெட்டுப்போன ஆட்டிறைச்சி மதுரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

500 kg bad condition waste meat in madurai

இதன் காரணமாக தற்போது அசைவ உணவகங்களில் நம்பிக்கையாக உணவு உட்கொள்ளவே மக்கள் தயக்கம் அடைந்து உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios