5 youths dead in sea in vedharanyam
காணும் பொங்கலை முன்னிட்டு நடுக்கடலில் குளிக்க சென்ற 5 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காணும் பொங்கலன்று கடற்கரைகளுக்கு சென்று கொண்டாடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், இன்று காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில், நடுக்கடலில் குளிப்பதற்காக 20 இளைஞர்கள் படகில் சென்றுள்ளனர்.
நடுக்கடலில் குளித்துக் கொண்டிருந்த பரத், பிரவீன் குமார், யுகேந்திரன், கனிஷ்கர், ராஜாமணி ஆகியோர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்கப்பட்ட மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காணும் பொங்கலை கொண்டாட சென்று கடலில் மூழ்கி 5 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
