பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனை கண்டித்து நாடு முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ரணகளத்திலும் ஒரு குதூகலமாக 5 லிட்டர் பெட்ரோல் அல்லது 5 லிட்டர் டீசல் வாங்கினால் அதற்கேற்றவாறு ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இலவசம் என்ற புதிய அறிவிப்பை எச்பி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் நோக்கம் வாடிக்கையாளர்கள் பயன்பெற வேண்டும் என்பதாலும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்பதாலும் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது நிறுவனம் இதற்காக எச்பி நிறுவன புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்து வைத்து உள்ளது. இந்த செயலி மூலம், ஒரு மாதத்தில் 5 லிட்டர்  பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினால் அதற்கு ஏற்றவாறு ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை திரும்ப அந்த செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். மீண்டும் அடுத்த முறை பெட்ரோல் போடும் போது அதனை பயன்படுத்தி ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த அற்புத திட்டம் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் உள்ள எச்.பி ஜதர் பெட்ரோல் நிலையத்தில், அதன் உரிமையாளர் அமீன் தலைமையில் நடைப்பெற்றது. இந்த திட்டம் தற்போது கிருஷ்ணகிரியில் மட்டும் தொடங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.