வங்கிகளின் 5 நாள் தொடர் விடுமுறை....சரியான தகவல் இதோ...!

வங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை என கடந்த 2 நாட்களாக வாட்ஸ்  ஆப் மூலம் தொடர்ந்து தகவல் பரவி வருகிறது

ஆனால் உண்மையில் 5 நாட்களா விடுமுறையா என்றால் இல்லை....

வங்கி விடுமுறை குறித்து,வங்கி அதிகாரிகள் சரியான விவரத்தை தெரிவித்து  உள்ளனர்

அதன்படி,

மார்ச் 29 - மகாவீர் ஜெயந்தி (விடுமுறை )

மார்ச் 30- புனித  வெள்ளி (விடுமுறை )

மார்ச் 31-சனிக்கிழமை வங்கிகள் முழு நாள் இயங்கும்

ஏப்ரல் 1- ஞாயிற்றுகிழமை வழக்கமான விடுமுறை

ஏப்ரல் 2- வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் தினம் ...எனவே இன்றைய தினம்   வங்கிகள்  இயங்கும்,ஆனால் இந்த தினத்தில் பண பரிவர்த்தனைகள் மற்றும்  வாடிக்கையாளர்கள் சேவை ஏதும் மேற்கொள்ளப் பட மாட்டது என  தெரிவிக்கப்பட்டு  உள்ளது

எனவே, தவறான தகவலை நம்பாமல்,31 ஆம் தேதியான  சனிக்கிழமை வங்கி இயங்கும் என்பது  குறிப்பிடத்தக்கது.