கன்னியாகுமரி அருகே கல்லூரி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 5 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சுக்காங்கோட்டை ஐயப்பா கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு என தனி தனியாக பேருந்துகள் இயக்கபடுகின்ற்ன. இந்நிலையில் வழக்கம்போல், கல்லூரி முடிந்ததும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தது.

புலியூர் குறிச்சி அருகே சென்றபோது வேனின் பின்னால் வந்த லாரி வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில், வேனில் இருந்த மஞ்சு, சிவரஞ்சனி, தீபா, சங்கீதா உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர்.