Asianet News TamilAsianet News Tamil

விமான நிலைய கார்கோவில் 41 செல்போன்கள் அபேஸ் - ஒப்பந்த ஊழியர் உள்பட 3 பேர் கைது

விமான நிலைய கார்கோ பகுதியில், வெளிநாடுகளில் இருந்து வந்த பார்சல் பெட்டிகளை உடைத்து, 41 செல்போன்களை திருடிய ஒப்பந்த ஊழியர் உள்பட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனா்.

41 cell phones theift 3 members arrest
Author
Chennai, First Published Dec 22, 2018, 6:21 PM IST

விமான நிலைய கார்கோ பகுதியில், வெளிநாடுகளில் இருந்து வந்த பார்சல் பெட்டிகளை உடைத்து, 41 செல்போன்களை திருடிய ஒப்பந்த ஊழியர் உள்பட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனா்.

சென்னை விமான நிலைய கார்கோ பகுதியில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வரும் பார்சல்கள், அடிக்கடி உடைக்கப்பட்டு விலை உயர்ந்த பொருட்கள், குறிப்பாக செல்போன்கள் திருடுபோவதாக சென்னை விமான நிலைய போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதன்பேரில் போலீசார், தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனா். அதில், விமான நிலைய கார்கோ பகுதியில் ஒப்பந்த தற்காலிக ஊழியராக வேலை பார்க்கும் ஆலந்தூரை சேர்ந்த முருகன் (28) என்பவர், அடிக்கடி புதிய செல்போன்களை கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தெரிந்தது.

இதையடுத்து போலீசார், முருகனை பிடித்து விசாரித்தபோது, வெளிநாடுகளில் இருந்து வரும் பார்சல்களில், குறிப்பாக சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பார்சல்களை உடைத்து, அதில் உள்ள விலை உயர்ந்த செல்போன்களை திருடி சென்று, தனது நண்பர்களிடம் கொடுத்து விற்பனை செய்துள்ளார். இதன்படி இதுவரை 41 செல்போன்கள் திருடி, ₹10 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்தது தெரிந்தது.

அவர் கொடுத்த தகவலின்படி, முருகனின் நண்பர்கள் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகேந்திரன் (26), தேவந்திரன் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.அவர் மூலமாக ஏராளமான செல்போன்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார், முருகனின் வீட்டில் சோதனை நடத்தி 6 செல்போன்களை பறிமுதவிமான நிலைய கார்கோவில்  41 செல்போன்கள் அபேஸ் - ஒப்பந்த ஊழியர் உள்பட 3 பேர் கைது

விமான நிலைய கார்கோ பகுதியில், வெளிநாடுகளில் இருந்து வந்த பார்சல் பெட்டிகளை உடைத்து, 41 செல்போன்களை திருடிய ஒப்பந்த ஊழியர் உள்பட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனா்.

சென்னை விமான நிலைய கார்கோ பகுதியில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வரும் பார்சல்கள், அடிக்கடி உடைக்கப்பட்டு விலை உயர்ந்த பொருட்கள், குறிப்பாக செல்போன்கள் திருடுபோவதாக சென்னை விமான நிலைய போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதன்பேரில் போலீசார், தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனா். அதில், விமான நிலைய கார்கோ பகுதியில் ஒப்பந்த தற்காலிக ஊழியராக வேலை பார்க்கும் ஆலந்தூரை சேர்ந்த முருகன் (28) என்பவர், அடிக்கடி புதிய செல்போன்களை கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தெரிந்தது.

இதையடுத்து போலீசார், முருகனை பிடித்து விசாரித்தபோது, வெளிநாடுகளில் இருந்து வரும் பார்சல்களில், குறிப்பாக சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பார்சல்களை உடைத்து, அதில் உள்ள விலை உயர்ந்த செல்போன்களை திருடி சென்று, தனது நண்பர்களிடம் கொடுத்து விற்பனை செய்துள்ளார். இதன்படி இதுவரை 41 செல்போன்கள் திருடி, ₹10 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்தது தெரிந்தது.

அவர் கொடுத்த தகவலின்படி, முருகனின் நண்பர்கள் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகேந்திரன் (26), தேவந்திரன் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.அவர் மூலமாக ஏராளமான செல்போன்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார், முருகனின் வீட்டில் சோதனை நடத்தி 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் விற்பனை செய்த 31 செல்போன்களையும் பறிமுதல் செய்ய முடிவு செய்துள்ளனர். இதேபோல், விமான நிலைய கார்கே பகுதியில் வேலை பார்க்கும் மேலும் சில தற்காலிக ஊழியர்களும், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.ல் செய்தனர். மேலும், அவர்கள் விற்பனை செய்த 31 செல்போன்களையும் பறிமுதல் செய்ய முடிவு செய்துள்ளனர். இதேபோல், விமான நிலைய கார்கே பகுதியில் வேலை பார்க்கும் மேலும் சில தற்காலிக ஊழியர்களும், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios