சட்டத்திற்கு புறம்பாக அனுமதி இன்றி குரங்கணி காட்டு பகுதியில் மலை பயிற்சி சென்ற 40 கல்லூரி மாணவர்கள் திடீர் என ஏற்ப்பட்ட காட்டு தீயில் சிக்கியுள்ளனர். அடிக்கடி தீ விபத்து ஏற்படும் இந்த பகுதியில் எந்த வித பாதுகாப்பு கருவிகளும் எடுத்துச் செல்லாமல் ட்ரக்கிங் சென்ற மாணவர்களை வனத்துறையினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். 

இதுவரை 7 மாணவிகளை சிறு காயங்களுடன் மீட்டுள்ள வனத்துறை அதிகாரிகள் அவர்களை உடனடியாக குரங்கணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

மீதம் உள்ள 33 மாணவர்களை காட்டு தீயில் இருந்து பத்திரமாக மீட்க விமானம் மூலமும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளார். என்னினும் இரவு நேரம் என்பதாலும். தீயின் காரணமாக ஏற்ப்பட்ட புகைமூட்டத்தாலும்  மீட்பு பணியில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளது. 

அனுமதி இன்றி குரங்கணி காட்டு பகுதிக்கு மலையேற்றம் சென்ற மாணவர்கள் கோவை மற்றும் ஈரோடு பகுதியை சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து அந்த காட்டு பகுதியின் அருகில் வசித்து வரும் மலைவாழ் மக்களும் மாணவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இரவு நேரம் என்பதால் காட்டு தீயை கட்டுப்படுத்துவது சிரமம் என்றும் காடுப்பகுதில் விலங்குகளின் அச்சுறுத்தலும் இருக்கும் என கூறப்படுகிறது. எனினும் விடா முயற்சியோடு மாணவர்களை பத்திரமாக மீட்க வனத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.