சிவகங்கை

அதிக வருமான பெற வேண்டும் என்று தனியார் பேருந்து ஓட்டுநர் பேருந்தை அதிவேகமாக ஓட்டியுள்ளார். இதனால் அப்பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்ததில் அதில் பயணித்த 40 பேர் பலத்த காயம் அடைந்தனர். 

குறிப்பிட்ட நேரத்தை விட விரைவாக இலக்கை அடைந்துவிட்டால் அதிக பயணிகள் தங்களை நாடி வருவர் என்றும், இதனால் அதிக வருமானம் பெறலாம் என்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் கணக்கு போடுகின்றனர். இதற்கு அவர்கள் விலையாக கொடுப்பது பயணிகளின் உயிர் என்பது தான் ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது.