ராமநாதபுரத்தில் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ராமநாதபுரத்தில் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர் முத்துராமன். இவருடைய அந்தோணிராஜ், அதே பகுதியில் காண்ட்ராக்ட் வேலை பார்த்து வருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில், இவர்களது உறவினர் ஒருவர் உடல்நலக்குறைவால் இருக்க, அவரை பார்க்க முத்துராமன் குடும்பத்தினர் காரில் புறப்பட்டனர். காரை அந்தோணிராஜ் ஓட்டி வந்தார். அப்போது உச்சிப்புளி அருகே கார் சென்றுக் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென்று கட்டுபாட்டை இழந்தது. சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் வேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விபத்தில் உயிரிழந்த அந்தோணிராஜ், முத்துராமன், பரமேஸ்வரி, கோவிந்தம்மாள் உடல்களை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.