35 soverign gold theft

ஈரோடு பெருந்துறை அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு பெருந்துறை அருகே உள்ள சுள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

தினமும் இரவு வேலைக்கு சென்றுவிட்டு காலை வீடு திரும்புவது வழக்கம். அதேபோல் நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பினார்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிச்சியுற்றார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 35 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சுந்தரமூர்த்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.