கடலூர்

நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வருகிற நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டமாக்க வேண்டும் என்று கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், விழுப்புரம் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் தலைமைத் தாங்கினார். விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலர் டி.ஏழுமலை விளக்கவுரை ஆற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், “நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வருகிற நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டமாக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான சாதி, மதவெறி, பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்த வேண்டும்,

பெண் குழந்தைகள், மாணவிகள் மீதான பாலியல் கொடுமைகளை தடுக்க வேண்டும்,

பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலியை ஆண்களுக்கு இணையாக உயர்த்தி வழங்க வேண்டும்,

அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில், கடலூர் மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.மேரி, ஆர்.சிவகாமி, பி.தேன்மொழி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.கற்பனைச்செல்வம், மு.மருதவாணன், கோ.மாதவன், பி.கருப்பையன், வி.சுப்புராயன், ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.