30 yrs lod man raped 60 yrs old lady in pondy

60 வயது ஆயாவை கூட விட்டு வைக்காத 3௦ வயது காம கொடூரன்..!

புதுவையில் 60 வயது மதிக்கத்தக்க, மேரி என்ற நபரை, அதே பகுதியை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பிரகாஷ் என்ற பூ வியாபாரி,பாலியல் பலாத்காரம் செய்து கொடுமையாக கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை எடுத்து உள்ளது.

மேரி என்பவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.கணவரை இழந்து பிள்ளைகளுக்காக வாழ்ந்து வந்த இவர்,கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மேரி வீடு திரும்பவில்லை.இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பபட்டு உள்ளது.

பின்னர்,கடந்த 3 ஆம் தேதி, தென்னந்தோப்பில் மேரியின் உடல் அழுகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, மேரி தென்னந்தோப்பு வழியாக செல்லும் போது,அங்கு குடித்துக்கொண்டிருந்த பூ வியாபாரி மேரியிடம் பேசி உள்ளார்.

ஏற்கனவே மேரி குடிபழக்கம் கொண்டவர் என்பதால், இருவரும் சேர்ந்தே குடித்து உள்ளனர். பின்னர் குடி போதையில் போரகாஷ், மேரியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.அப்போது மேரி கெட்ட வார்த்தைகளால் அந்த நபரை திட்டியதுடன், உடனே அங்கிருந்து செல்ல முயற்சி செய்யும் போது, வலுக்கட்டாயமாக மேரியை கீழே தள்ளி தன் கையில் வைத்திருந்த கத்தியால் அவரை குதி உள்ளார்.

 ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை பாலியல் பதாலாத்காரம் செய்ததோடு,கொலை செய்து , அங்குள்ள ஓலைகளை கொண்டு மூடி மறைத்து வைத்து உள்ளார்.

பிரகாஷ்க்கு திருமணம் நடந்து,ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.