Asianet News TamilAsianet News Tamil

கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரம்.. செங்கல்பட்டில் ரயில் மோதி பீஸ் பீஸான 3 மாணவர்கள்.. என்ன காரணம் தெரியுமா?

செங்கல்பட் டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த செட்டிபுண்ணியம் பகுதியை சேர்ந்தவர்கள் அசோக்குமார்(24), பிரகாஷ்(17), மோகன் (17) 3 பேரும் நண்பர்கள். இதில், மோகன், பிரகாஷ் ஆகிய இருவரும் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து வந்தனர். இவர்கள் மூவரும் எப்போதும் ரயில்வே இருப்புப் பாதையில் அமர்ந்து செல்பி வீடியோக்களை பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வழக்கமாக வெளியிட்டு வந்துள்ளனர். 

3 youths killed in train accident near chengalpattu
Author
Chengalpattu, First Published Apr 8, 2022, 11:12 AM IST

செங்கல்பட்டு அருகே ரயில்வே தண்டவாளத்தில் நின்று கெத்து காட்டுவதாக எண்ணி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வடியோ பதிவு செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் மின்சார ரயில் மோதியதில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

செல்பி வீடியோக்கள்

செங்கல்பட் டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த செட்டிபுண்ணியம் பகுதியை சேர்ந்தவர்கள் அசோக்குமார்(24), பிரகாஷ்(17), மோகன் (17) 3 பேரும் நண்பர்கள். இதில், மோகன், பிரகாஷ் ஆகிய இருவரும் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து வந்தனர். இவர்கள் மூவரும் எப்போதும் ரயில்வே இருப்புப் பாதையில் அமர்ந்து செல்பி வீடியோக்களை பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வழக்கமாக வெளியிட்டு வந்துள்ளனர். 

3 youths killed in train accident near chengalpattu

ரயில் மோதல்

இந்நிலையில், நேற்று மாலை வழக்கம்போல தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மூன்றாவதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் இருப்புப் பாதையில் 3 பேரும் அமர்ந்து வீடியோக்களை பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது சென்னை தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லக்கூடிய விரைவு ரயில் வருவதை கூட பார்க்காமல் வீடியோ பதிவு செய்துக்கொண்டிருந்த போது அவர்கள் மீது ரயில் மோதியது. இதில், உடல்சிதறி தூக்கி வீசப்பட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதடித்து உயிரிழந்தனர். 

3 youths killed in train accident near chengalpattu

3 பேர் பலி

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கா செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்கே கைப்பற்றப்பட்ட செல்போனையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios