3 years boy murdered and thrown into well Police investigation

மதுரை

மதுரையில் தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் மூன்று வயது ஆண் குழந்தையின் சடலம் மிதந்துக் கொண்டிருந்தது. அதனை மீட்ட காவலாளர்கள், குழந்தையை கொன்று வீசியது யார்? என்று விசாரித்து வருகின்றனர்.

மூன்று வயது ஆண் குழந்தை கொன்று கிணற்றில் வீசப்பட்டுள்ளது என்பதை அறிந்த இப்பகுதி மக்கள் அதனைக் காண அங்கு சூழ்ந்தனர். கிணற்றில் மிதந்த குழந்தையை வெளியே எடுத்தபோது அதனை கண்டு கதறினர். இதனால் இங்கு பரபரப்புத் தொற்றிக் கொண்டது.