3 members where death by train accident in chennai

சென்னையில் அடையாளம் தெரியாத 3 பேர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை பூங்கா ரயில் நிலையத்தை கடக்க முயன்ற 30 வயது மதிக்கதக்க ஆண் நபர் ரயில் மோதி பலியானார்.

அதே போல் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை கடக்க முயற்சித்த40 வயது மதிக்கதக்க ஒருவரும் பலியாகியுள்ளார்.

மேலும் அம்பத்தூர் - பட்டரவாக்கம் ரயில் நிலையம் இடையே ஆண் நபர் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்தார்.

இந்த 3 சம்பவங்களும் இன்று அதிகாலை நடந்துள்ளது. தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.