3 died due to poisonous gas

கடலூரில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்த துப்புரவு தொளிலாலாளர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதாள சாக்கடையை மனிதர்கள் சுத்தம் செய்யும் செயலை ஒழித்துக்கட்ட கோரும் போராட்டங்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

பார்த்தாலே மூக்கை மூடும் சாக்கடைக் குழிக்குள்ளே பல மணி நேரமாய் நின்று கொண்டு, எந்த ஒரு கவசமும் இன்றி, அடைப்பை எடுத்துப் போடுகிறார்கள் துப்புரவு தொழிலாளர்கள்.

பாதுகாப்பு கவசமின்றிப் பணியாற்றுவதால், விதவிதமான நோய்களுக்கு உள்ளாகின்றனர். பலர் குடிக்கு அடிமையாகின்றனர். ஓய்வு பெறும் முன்னரே பலர் உயிரிழக்கின்றனர்.

அந்த வரிசையில், கடலூரில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்த துப்புரவு பணியாளர்கள் 3 பேர் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.