3 bears attacked a woman

வேலூர் அருகே மூன்று கரடிகள் சேர்ந்து ஒரு பெண்ணை கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் பேர்ணாம்பேட் பகுதியில் கரடிகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இன்று பெர்னாம்பேட் பகுதியில் ஊருக்குள் புகுந்த 3 கரடிகள் சேர்ந்து 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கடித்து குதறின.

இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் கரடிகளை அடித்து ஓட்டிவிட்டு அப்பெண்ணை மீட்டனர். மேலும் அப்பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

கரடிகள் ஊருக்குள் வருவது குறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை வனத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.