2G case Delhi Highcourt issues notice to A.Raja Kanimozhi

2ஜி மேல்முறையீட்டு வழக்கில் விடுதலையை எதிர்த்து அமலாகத்துறையின் மேல்முறையீடு மனு தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

2ஜி அலைக்கற்றை தொடர்பாக சி.பி.ஐ. அமலாக்கத்துறை ஆகியவை தொடர்ந்த வழக்குகளில், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 19 பேரை விடுதலை செய்து கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை சார்பில் நேற்று முன்தினம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. சார்பில் நேற்று டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இதை தெரிவித்தார். இந்த மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

இந்த நிலையில், அமலாக்கத்துறை சார்பில் தக்கால் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.