நீடாமங்கலம், ஒளிமதி, கோயில்வெண்ணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 28 அதிமுகவினரை, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவ பொம்மை எரித்த வழக்கில் இருந்து விடுதலை செய்து நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதிமுக பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதாவை தரக்குறைவாக விமர்சித்ததாகக் கூறி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவ பொம்மையை எரித்தனர்.

இதுகுறித்து, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அதிமுக செயலர் எம்.எஸ். சங்கர், நகரச் செயலர் இ.ஷாஜஹான் உள்ளிட்ட 28 பேரை நீடாமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர்.

நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை வந்தது.

இதனை வெள்ளிக்கிழமை அன்று விசாரித்த நீதிபதி பாலசுப்பிரமணியன், அதிமுக நிர்வாகிகள் 28 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.