சென்னை உள்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஏற்கெனவே காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்துவரும் நிலையில் இரவு 10 மணி வரைக்கும் மழை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய வட கடலோர மாவட்டங்களிலும், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் இரவு பத்து மணிவரை மழை பெய்யும்.
சேலம், விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அர்னால்டு டிக்ஸ் யார்? சுரங்கத் தொழிலாளர்களை மீட்க ஆஸ்திரேலிய நிபுணர் செய்தது என்ன?
கடந்த சில வாரங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இன்றும் (புதன்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் பரவலாக மழைப்பொழிவு காணப்படுகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, இன்று இரவு 10 மணி வரை தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் மழை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக ஒரு மணிநேரத்துக்கு மேல் மழைபெய்துவருகிறது.
சென்னையில் வியசார்பாடி, அம்பத்தூர், கோயம்பேடு, பெரம்பூர், ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை, வடபழனி, அசோக் நகர் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், குன்றத்தூர் பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம் போன்ற புறநகர்ப் பகுதிகளிலும் அடைமழை வெளுத்து வாங்கி வருகிறது.
சாலைகளில் மழைநீர் தீங்கியுள்ளதால் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் வேலை முடிந்து வீடு திரும்புவோர் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களும் குளம்போல இருக்கும் மழை நீரில் மிதந்தபடியே மெதுவாகச் செல்லும் நிலை உள்ளது.
உலகின் 8வது அதிசயமாக அறிவிக்கப்பட்ட கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில்!