சாலை ஒப்பந்ததாரர் தியாகராஜன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வருத்துறையினர் நடத்திய சோதனையில் 22 கிலோ தங்கம் மற்றும் 41 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சாலைப்பணி ஒப்பந்ததாரர் தியாகராஜனின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனை நடத்தி வந்தனர்

தமிழக அரசின் சாலைப்பணி ஒப்பந்ததாரராக தியாகராஜன் இருந்து வருகிறார். இவர் மீது வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாகவும், வருமானத்தை குறைத்து காண்பித்ததாகவும் புகார் ஏழுந்தது. 

இந்த புகாரை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள், சென்னையில் உள்ள தியாகராஜனின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று சோதனை நடத்தினர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 22 கிலோ தங்கம் மற்றும் 41 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருமானத்தை குறைத்து காண்பித்தல் மற்றும் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது குறித்த ஆவணங்கள் கைப்பற்ற பிறகே இது குறித்து முழுமையான தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.