முதுமலைக்கு வரும் பிரதமர் மோடி..! பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்.. புலிகள் காப்பகம், விடுதிகள் மூடல்
இரண்டு நாள் பயணமாக வருகிற 8 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, 9 ஆம் தேதி முதுமலையில் உள்ள யானைகள் முகாமிற்கு செல்லவுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைக்காக முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டுள்ளது. மேலும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
தமிழகம் வரும் பிரதமர் மோடி
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வருகிற 8 ஆம் தேதி தமிழகம் வருகிறார். சென்னைக்கு வரும் பிரதமரை வரவேற்க பாஜகவினர் தயார் ஆகி வருகின்றனர். சென்னையில் நடைபெறும் நிகழ்வில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தை திறந்துவைக்கிறார். மேலும், சென்னை - கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை, தாம்பரம்-செங்கோட்டை இடையே வாரம் 3 முறை விரைவு ரயில் சேவை இதேபோல, ரூ.294 கோடி மதிப்பில் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு முடிக்கப்பட்டுள்ள அகலப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இதையடுத்து இரவு சென்னை ராஜபவனில் தங்கும் மோடி அடுத்த நாள் (9ஆம்தேதி) காலை சென்னையில் இருந்து கர்நாடகாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் அத்துமீறும் சீனா.. ஏன் மௌனம் காக்கிறார் பிரதமர் மோடி.? காங்கிரஸ் கேள்வி.!
யானைகள் முகாமில் மோடி
புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன் விழா, நாடு முழுவதிலும் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, புலிகள் காப்பகங்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட உள்ளார். கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்துக்கு வரும் 9-ம் தேதி வருகிறார். அங்கிருந்து, முதுமலை புலிகள் காப்பகத்துக்கும், வயநாட்டில் உள்ள புலிகள் காப்பகத்துக்கும் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Watch : பிரதமர் மோடியின் வருகையையொட்டி முதுமலை பகுதியில் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் ஆய்வு!
இதற்காக மசினகுடியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி வருகையையொட்டி, இன்று முதல் 9-ம் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஓய்வு விடுதிகள், துயிலகங்கள், உணவகம், சிற்றுண்டியகம் உள்ளிட்டவை 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்
முதுமலை வரும் பிரதமர் மோடி ஆஸ்கர் விருது பெற்ற யானைகள் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பேசவுள்ளார். இதே போல முதுமலை உள்ள யானை பாகன்களையும் மோடி சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி முதுமலை வருவதையொட்டி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகம் ஆகியவற்றுக்கு மத்தியில் அமைந்துள்ள பந்திப்பூர் பூங்கா அமைந்துள்ள பகுதி மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள பகுதியாகும், எனவே பாதுகாப்பிற்காக, சத்தியமங்கலத்தில் இருந்து சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் நக்சலைட் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் ஏப்ரல் 7ஆம் தேதி காலை முதல் காப்புக்காடுகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் மசினக்குடி முதல் தெப்பக்காடு வரை சுமார் 2000போலீசார் பாதுகாப்பு பணியில ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதையும் படியுங்கள்
பயிர் விளைச்சல் நிலங்களை பாலைவனமாக்குவதா? தமிழக அரசை அலட்சியப்படுத்தி ஆணையா? சீறும் கி.வீரமணி