20 rs note distribution in rk nagar is true only said ex mla rajasekar
ஆர்.கே நகர் இடைதேர்தலில்,டிடிவி தினகரன் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றார்.
அவரது வெற்றி குறித்து,பல்வேறு அரசியல் கட்சிகள்,ஆர்.கே நகர் மக்களுக்கு பணம் கொடுத்து தான் வெற்றி பெற்றார் என குற்றம் சாட்டினர்.
இதற்கு தினகரன் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்து வந்தார். பின்னர் 20 ரூ நோட்டு மூலம் டோக்கன் வழங்கப் பட்டு பணம் பட்டுவாடா செய்ததாக புகார் வந்தது. இதற்கும் மறுப்பு தெரிவித்து வந்தார் தினகரன்.
இந்நிலையில்,தொட்டிலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகர் ரூ.20 டோக்கன் வழங்கியது உண்மைதான் என ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும், ரூ.20 டோக்கன் திட்டம் முக்கிய நிர்வாகிகளின் மாஸ்டர் ப்ளான் என்றும், எதிர்கட்சிகளின் சூழ்ச்சியை முறியடிக்கவே ஜெ. சிகிச்சை குறித்த வீடியோ வெளியிடப்பட்டது என்றும் தெரிவித்து உள்ளார்.இவருடைய பேச்சால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
முசிறியில் டிடிவி அணி நிர்வாகிகள் கூட்டத்தில் ராஜசேகர் இவ்வாறு பேசி உள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த,அதிமுக செய்தி தொடர்பாளர் கே.சி.பழனிசாமி "ஆர்.கே நகர் தேர்தலுக்காக 300 கோடி ரூபாய் கொடுத்து வெற்றி பெற்று உள்ளார் தினகரன் என்று தெரிவித்து உள்ளார்.
