20 killed in Larrys accident near Tirupati - PM Modi
திருப்பதி அருகே கடைகளுக்குள் லாரி புகுந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
காளகஸ்தியில் இருந்து திருப்பதி நோக்கி லாரி ஒன்று அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஏற்பேடு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுபாட்டில் இழந்து கடைகளுக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயமடைந்தவர்கள் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பவர்கள் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
