வருமான வரித்துறையின் அதிரடி நடவடிகைக்காக 20 கம்பெனி துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது உள்ளூர் போலீசாரை நம்பாமல் துணை ராணுவத்தினரை பாதுகாப்புக்கு அழைத்திருந்தனர். இது ஒருபுறம் பெரிய சலசலப்பை உருவாக்கினாலும், மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையில் இருந்து தமிழக அதிகாரிகள் இன்னும் வெளியில் வரவில்லை.

இந்நிலையில், மத்தியில் இருந்து கூடுதலாக தமிழகத்திற்கு 20 கம்பெனி துணை ராணுவப்படையினர் வந்து தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் எதற்காக கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர். சாதாரண நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டுள்ளதா அல்லது தமிழகத்தில் பெரிய அளவில் வருமான வரித்துறை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்கள் வரவழைக்கப்பட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.