கடந்த 27ம் தேதி பானி பூரி குருமாவை பெரிய பாத்திரத்தில் கீழே இறக்கி வைத்திருந்தார். அப்போது,  2 வயது குழந்தை ரிஷி கொதிக்க கொதிக்க வைக்கப்பட்டிருந்த பானிபூரி குருமாவில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளான். வலி தாங்க முடியாமல் அலறிய குழந்தையின் அழுகுரலை கேட்டு தாய் ஓடிவந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். 

கும்பகோணத்தில் கொதிக்கும் பானி பூரி குருமாவில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பானி பூரி குருமா

கும்பகோணம் மாவட்டத்தை அடுத்த ஐந்துதலைப்புவாய்க்கால் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகேசன்-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு ரிஷி என்ற 2 வயது மகன் இருந்தான். கோயம்புத்தூரில் கூலிவேலை பார்த்து வந்த முருகேசன் அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வார். அவரது மனைவி அனுசியா வீட்டு வாசலிலேயே பானிபூரி கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி பானி பூரி குருமாவை பெரிய பாத்திரத்தில் கீழே இறக்கி வைத்திருந்தார். அப்போது, 2 வயது குழந்தை ரிஷி கொதிக்க கொதிக்க வைக்கப்பட்டிருந்த பானிபூரி குருமாவில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளான். வலி தாங்க முடியாமல் அலறிய குழந்தையின் அழுகுரலை கேட்டு தாய் ஓடிவந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். 

குழந்தை உயிரிழப்பு

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பின்னர், மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஒருவாரம் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை ரிஷி பரிதாபமாக உயிரிழந்தது. 2 வயது சிறுவன் பானிபூரி குருமாவில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.