2 whiskey bottle 300 money to put diesel The wage paid by the girl to the murderer to kill the new husband
காதலைப் பிரித்து திருமணம் செய்துகொண்டதால் கோபமான இளம் பெண் கட்டிய கணவனை கொலை செய்ய வண்டிக்கு டீசல் போட 300 ருபாய் பணம், 2 விஸ்கி பாட்டில் கொடுத்து கொடூரமாக போட்டுத்தள்ளிவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சிட்லபுடிவலசா கிராமத்தைச் சேர்ந்தவர் கௌரிசங்கர். அதே மாவட்டம் வீரகட்லம் மண்டலை அடுத்த கடேகல்ல கிராமத்தைச் சேர்ந்த தனது அத்தை மகள் சரஸ்வதியை திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, கோலாகலமாக நடந்தது.
இந்த திருமணத்துக்கு முன்பு சரஸ்வதிக்கு பேஸ்புக் மூலம் சிவா என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு பின்பு காதலாக மாறி இருவரும் டவுன் பக்கம் தனியாக திரிந்து உல்லாசமாக இருந்துள்ளனர். அதே நேரத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். ஆனால் சரஸ்வதியின் வீட்டினருக்கு தெரியவரவே, அவரது உறவினர் கௌரிசங்கர்க்கு கட்டாயக் கல்யாணம் செய்து வைத்ததாக தெரிகிறது.

இவர்களது காதல் விஷயம் தெரிந்த கௌரிசங்கர் இருவரையும் பிரித்து கல்யாணம் செய்துகொண்டதாக மனமுடைந்த சரஸ்வதி, தனது கணவன் தான் காதலை பிரித்தான் என காதலன் சிவாவிற்கு போன் போட்டு அழுதுள்ளார். இதையடுத்து நாம் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும், என்னால் அவனுடம் வாழ முடியாது என சொன்ன சரஸ்வதி. கௌரி சங்கரை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார்.
இந்நிலையில் சரஸ்வதியின் காதலன் சிவா மற்றும் ஒரு ரௌடியுடன் சேர்ந்து கொண்டு, கணவரை கொல்ல சரஸ்வதி திட்டம் தீட்டியுள்ளார். திருமணமான 10 நாட்கள் ஆன நிலையில், அவர்கள் இருவரும் விஜயநகரத்துக்கு ஷாப்பிங் சென்றுள்ளனர். ஷாப்பின் முடித்துக் கொண்டு ஆட்டோவில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஓரிடத்தில் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு, சரஸ்வதி சென்றுள்ளார்.
பின் தொடர்ந்து வந்த சிவா மற்றும் ரௌடி இருவரும் இரும்பு கம்பியால் கௌரிசங்கரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே கௌரிசங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அங்கு சரஸ்வதி எதுவும் தெரியாதது போல் கதறி அழுதுள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார், சரஸ்வதியின் போன் கால் ரெக்கார்டை ஆய்வு செய்தனர். அதில் அவர் சிவாவுடன் அதிக நேரம் பேசியது தெரியவந்தது.தொடர் விசாரணையில், சரஸ்வதியின் கொலைத் திட்டம் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை விசாரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அந்த பெண் விசாரணையில், தனது மாமன் மகனான கவுரி ஷங்கர்க்கு நாங்கள் காதலித்தது தெரியும், என்னை ஒரு தலையாக நேசித்த கவுரிஷங்கர் எங்கள் வீட்டின் பணப் பிரச்சனையை போக்கினார். கடனில் இருந்த எங்கள் குடும்பத்திற்கு பணம் கொடுத்து உதவினார். அதனால் அவரை திருமணம் செய்துகொண்டேன். ஆனால் என்னால் அவரோடு வாழ முடியவில்லை, எனது காதலன் நியாபகமாகவே இருக்கவே,புதுக் கணவரைக் கொலை செய்ய திட்டம் போட்டேன்.
அதற்காக ஆட்டோவிற்கு டீசல் போட 300 மற்றும் 2 விஸ்கி பாட்டில் கொடுத்து ஆட்டோ ஓட்டுநரையும் ஒருவரையும் சேர்த்துக் கொண்டு கொலை செய்தோம், கணவரை வழிப்பறி செய்யும் கொள்ளை கும்பல் கொண்டுவிட்டதாக நாடகம் ஆடினேன் ஆனால் போலீசார் என்னோட காதலனோடு பேசிய செல்போன் உரையாடலை வைத்து கண்டுபிடித்துவிட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
