2 ladies tried to attend the suicide in perambalur

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு பெண்கள் மண்என்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் காவலர்கள் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அனிதா என்றபெண் அவரை ஆபாச படமெடுத்து மிரட்டி வருவதாகவும், அதனால் மனமுடைந்த இப்பெண் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆலோசனை வழங்கி, குற்றம் சாட்டப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளது காவல்துறை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே எதற்கெடுத்தாலும் சும்மா சும்மா தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கும் ஒரு செயல் அனைவரையும் நம்பிக்கை இழக்க செய்கிறது.