வங்கி, ஏடிஎம் மையங்களுக்கு கடந்த 2 நாள்களாக விடுமுறை விட்டதால், பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். 

மத்திய அரசு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைத் தொடர்ந்து மக்கள் தொடர்ந்து, வங்கிகளை நாடி வருகின்றனர்.

போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததால் பணத் தட்டுப்பாடு காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் சில ஏடிஎம் மையங்களில் விநியோகிக்கப்படும் ரூ.2 ஆயிரம் பணத்தை எடுக்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஆனால், அவற்றிற்கு சில்லரை கிடைக்காததால் மக்கள் கடும் சிரமத்தில் இருக்கின்றனர்.

சனிக்கிழமை மாதத்தின் 2-வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் ஏடிஎம் மையங்களும் கடந்த இரு தினங்களாக மூடிக் கிடப்பதால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டனர்.

ஏ.டி.எம் கார்டு வைத்திருப்பவர்கள் பெரிய பெரிய மால்களில் பொருட்களை வாங்கி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.

ஆனால், ஏழை, நடுத்தர மக்கள் அண்ணாச்சி கடைகளை தான் பெரிதும் நம்பி இருக்கின்றனர். இதனால், சிறு குறு வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

81% வியாபாரிகள் இந்த செல்லாத நோட்டு அறிவிப்பால், தங்களது தொழில்களை விட்டுச் சென்றுள்ளனர் என்று ஆய்வு கூறுகிறது.