நாட்றம்பள்ளியிலிருந்து ஒரு ஜோடி..! குடியாத்தத்திலிருந்து மறு ஜோடி..! 

வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இரண்டு காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆசை அறுபது நாள்..மோகம் முப்பது நாள்...என்பார்கள்..ஆனால் காதல் எத்தனை நாள் என்பதற்கு கூட  நாட்கள் குறிக்கப்படும் நிலை உருவாகும் சூழல் தான் தற்போது நிலவி வருகிறது. 

இளம் வயதில் ஒரு பெண் ஆண் மீது காதல் கொள்வதும், ஒரு ஆண் ஒரு பெண் மீது மோகம் கொள்வதும் வாடிக்கையான விஷயம் தான்...

ஆனால் எந்த பருவத்தில் எதை செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு வரைமுறை உள்ளது அல்லவா..?பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து வேலைக்கு அனுப்பி, அவர்கள் சொந்த காலில்  நிற்கும் போது ஊரறிய அனைவரையும் அழைத்து திருமணம் செய்து வைக்க ஆசைப்படுவார்கள்.

அதே வேளையில் இன்றைய இளைய தலைமுறையினரும், காதல் எப்போது செய்ய வேண்டும், திருமணம் எப்போது செய்ய வேண்டும் என்ற அறிதல் நன்றாகவே உள்ளது.

இருந்த போதிலும் ஒரு சில இளம் வயதினர், பள்ளி பருவத்திலேயே காதல் செய்து கல்லூரி முதல் ஆண்டிலேயே திருமணம் செய்துக்கொள்ளும் அளவிற்கு மனபக்குவம் இல்லாமல், பெற்றோர்களை மீறி  வீட்டிற்கு தெரியாமல் ஓடி போவது திருமணம் செய்துக்கொள்வது என செய்கிறார்கள்.

அந்த வரிசையில் இன்று இரண்டு காதல் ஜோடிகள் வேலூர் மாவட்டம் எஸ்.பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த காதல் ஜோடி ஒன்றும், குடியாத்தத்தை சேர்ந்த மற்றொரு காதல் ஜோடியும் இன்று வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர்.

இரு காதல் ஜோடியும் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இரண்டு ஜோடிகளும் திருமண வயதை தொட்டு விட்டார்களா..? இந்த நான்கு பேரும் ஒரே கல்லூரியில் படிப்பவர்களா..? என்பது குறித்து முழுமுதற்விசாரணையை துவக்கி உள்ளது காவல் துறை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.