1year old child recovery after 7 hours at Trichy building accident
திருச்சி மாவட்டம், மலைக்கோட்டை அருகே மூன்று மாடிக் கட்டடம் இன்று அதிகாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. வீடுகளில் இருந்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
இடிந்து விழுந்த கட்டடத்தில் 6 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். இந்த கட்டடம் பழைமையான கட்டடம் என்று கூறப்படுகிறது.
கட்டடம் இடிந்து விழுந்த தகவல் அறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, 2 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர். உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேரின் உடல் மீட்கப்பட்டது.
மீட்பு பணியின்போது, ஒன்றரை வயதான பரமேஸ்வரி என்ற குழந்தை மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளார். சுமார் 7 மணி நேரத்துக்குப் பிறகு பரமேஸ்வரியை மீட்டுள்ளனர்.
குழந்தையின் பெற்றோர் பழனி - ராசாத்தி இடிபாட்டில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களையும் மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
