150 manithaneya makkal katchi arrested in Tiruvannamalai railway station seized

திருவண்ணாமலை

பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து திருவண்ணாமலை இரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் 150 பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.

பாபர் மசூதி இடிப்பை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் திருவண்ணாமல இரயில் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக திருவண்ணாமலை காவலாளர்களுக்கு தகவல் கிடைத்ததாம்.

அந்த தகவலிபேரில் காவல் ஆய்வாளர்கள் விஜய்குமார், முருகன் ஆகியோர் தலைமையில் திருவண்ணாமலை இரயில் நிலையத்தில் நேற்று பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், இரயில் நிலையம் முன்பும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பகல் 12.30 மணியளவில் மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சையத்முஸ்தபா, ஹாஜாசெரீப், ஷபீர்அகமத் ஆகியோர் தலைமையில் 150 பேர் இரயில் நிலையத்தை முற்றுகையிட வந்தனர்.

அவர்களை காவலாளர்கள் தடுத்தனர். அப்போது அவர்கள் பாபர் மசூதி இடித்ததைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறே இரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால், காவலாளர்களுக்கும், அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் 150 பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் அனைவரையும் அருகில் இருந்த திருமண மண்டபங்களில் தங்கவைத்துவிட்டு மாலையில் விடுவித்தனர்.