150 bank accounts closed suddenly

சசிகலா மற்றும் தினகரனுக்கு சொந்தமான பல இடங்களில் மூன்றாவது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

போலி நிறுவனங்கள் மூலம் பல கோடி மதிப்புள்ள 40 சொத்துக்கள் வாங்கியுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது . அதனை தொடர்ந்து, தற்போது சசிகலா மற்றும் தினகரனின் உறவினர்களுக்கு சொந்தமான 150 வங்கி கணக்குகள் முடக்கியது வருமான ரித்துறை

அவ்வாறு அடையாளம் காணப்பட்ட போலி நிறுவனங்களில் கூட அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது 

இதுவரை முழுமையான புள்ளி விவரம் கூறப்படவில்லை. இருந்த போதிலும் தொடர்ந்து வருமான வரி சோதனை நடைபெற்று வருவதால், பல கோடி ரூபாய் ரொக்க பணம் மற்றும் வரி எய்ப்பு தங்கம் மற்றும் பண பதுக்கல் என அனைத்தும் வெளிச்சத்திற்கு வர உள்ளது