சென்னை திருவொற்றியூர் சரவணா நகரை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் (37). கடந்த வாரம் நெடுஞ்செழியன் ஆந்திர மாநிலம் சென்றார். அங்கு செம்மரங்களை வெட்டி காரில் ஏற்றி கொண்டு சென்றார். ஆந்திரா மாநிலம் ஏர்பேடு பகுதியில் சென்றபோது, சோதனைச்சாவடியில் நிறுத்தாமல் வேகமாக சென்றார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உடனே அங்கிருந்த போலீசார், காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அதில், செம்மரங்களை இருப்பதை கண்டதும், அவரை போலீசார் கைது செய்து, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், சென்னை மாதவரம் பகுதியில் உள்ள 2 குடோன்களில் செம்மரங்கள் பதுக்கி வைத்துள்ளதாக கூறினார்.

இதையடுத்து ஆந்திர போலீசார் சென்னை வந்தனர். இங்கு மாதவரம் பால்பண்ணை போலீசார் மற்றும் மாதவரம் தாசில்தார் முன்னிலையில், மாதவரம் பகுதியில் ஜமாலுதீன் என்பவருக்கு சொந்தமான 2 குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சுமார் 9 டன் செம்மர கட்டைகளை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கிருந்த அனைத்து கட்டைகளையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.5 கோடி என கூறப்படுகிறது.

மேலும் விசாரணையில், இந்த செம்மரக்கட்டைகள் சினாவுக்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள புத்த துரவிகளுக்கு மணியாக செய்து, மாலையாக அணிவிக்க பயன்படுத்துவது தெரிந்தது. இதை தொடர்ந்து போலீசார் தலைமறைவாக உள்ள ஜமாலுதீனை வலை வீசி தேடி வருகின்றனர்.