பரபரப்பு..சிதம்பர நடராஜர் கோவில் விவகாரம்.. அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்த தடை.. அரசு அறிவிப்பு..

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று முதல் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிகோரி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள் மற்றும் இதர போராட்ட குழுவினர் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

144 restraining order in force in Chidambaram from today

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்யவதற்கு முதலில் முக்கிய விஐபிக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர், பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு பல்வேறு பிரச்னைகள் காரணமாக சிதம்பரம் தீட்சிதர்கள் ஒன்றுசேர்ந்து கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு தடைவிதித்தனர்.  இதனால் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனைவருக்கும் அனுமதிக்க வழங்கக்கோரி போராட்டங்கள் நடைபெற்றது. இதனால் கோயிலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.

சமீபத்தில் கனகசபை மீது ஏறி பெண் பக்தர் ஒருவர் சாமி கும்பிட சென்றபோது சாதிப்பெயரை சொல்லி அவரை திட்டியாக சர்ச்சை ஏற்பட்டது. தொடர்ந்து அந்த பெண் அளித்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதே பிரச்சனையால், தாக்கப்பட்ட தீட்சிதர் ஒருவர், மற்ற தீட்சிதர்கள் மீது கொலை முயற்சி புகார் அளித்ததாக தெரிசக தீட்சிதர் மீண்டும் சாமி கும்பிட சென்றபோது மீண்டும் தீட்சிதர்கள் தடுத்ததாலும் பரபரப்பு ஏற்பட்டது. 

144 restraining order in force in Chidambaram from today

இதனிடையே சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்ககோரி பல்வேறு கட்சிகள், அமைப்புக போராட்டம் நடத்தி வந்தனர்.இந்நிலையில் தான் அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள் மற்றும் இதர போராட்ட குழுவினர் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று முதல் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர் சன்னிதியில் மேடையேறி தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு சம்பந்தமாக ஏற்பட்டுள்ள சட்டப் பிரச்சனைகள் காரணமாக அரசின் அடுத்த முடிவு சட்ட வல்லுனர்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு சிதம்பரம் பகுதியில் மேற்கண்ட நடராஜர் கோவில் சம்பந்தமாக அரசியல் கட்சிகள் சமூக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிதம்பரம் ஆர்டிஓ ரவி உத்தரவு பிறப்பித்து அறிவிப்பு செய்துள்ளார்.

இந்நிலையில் இதுக்குறித்து கோவிலை நிர்வகிக்கும் தீட்சிதர் கூறுகையில், கோயிலுக்கு வரும் மக்கள் மற்றும் நிர்வாகத்தின் நலன் கருதி கனகசபை எனப்படும் சிற்றம்பல மேடை மீது யாரையும் அனுமதிக்க கூடாது என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் 450 தீட்சிதர்கள் கருத்து கேட்கப்பட்டு அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவில் இந்த முடிவு எடுக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

144 restraining order in force in Chidambaram from today


 

முன்னதாக, சிதம்பர நடராஜர் கோவில் ஏற்படும் பிரச்சினைகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக அதில் தனிகவனம் செலுத்தி வருகிறார் என்று  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். கனகசபை விவகாரம் தொடர்பான விவரங்களை ஆய்வு செய்து வரும் முதலமைச்சர், விரைவில் ஒரு நல்ல முடிவெடுத்து, சட்டத்தின்படி அங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios