திட்டச்சேரி,

கூட்டுறவு கடன் சங்கங்களில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க அனுமதி கொடுக்காததால் எந்தவித முன்னறிவிப்புமின்றி 11 கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டன.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க அனுமதி கொடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நாள் ஒன்றுக்கு வங்கியில் இருந்து ஒரு நபர் ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இதனால் தற்போது விவசாயிகளுக்கு பயிர்கடன், நகைக்கடன் உள்ளிட்ட கடன் வழங்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

இதனால் திங்கள்கிழமை திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 11 கூட்டுறவு கடன் சங்கங்களும் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மூடப்பட்டன.

இதனால் விவசாயிகள் பயிர் கடன், நகை கடன் உள்ளிட்ட எந்த கடனும் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.