Asianet News TamilAsianet News Tamil

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுத் தேதி அறிவிப்பு - ஜூன் 28ம் தேதி துவங்கி ஜூலை 6ம் தேதி வரை நடைபெறுகிறது

10th standard Submission exam date of Announcement
10th standard Submission exam date of Announcement  - starts from june 28th till july 6th
Author
First Published May 29, 2017, 12:29 PM IST


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.தமிழகம் மட்டும் புதுச்சேரியில் மொத்தம் 4 லட்சத்து 98 ஆயிரத்து 406 மாணாக்கர்கள் தேர்வில் பங்கேற்றனர். இவர்கள் தவிர  தனித் தேர்வர்களாக  39 ஆயிரத்து 741 பேரும் பொதுத் தேர்வை எழுதினர். 

இதனைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்த தேர்ச்சி விகிதம் 94.4 % என அறிவிக்கப்பட்டது. வழக்கம் போல இம்முறையும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். 

92.5 % மாணவர்களும், 96.2 % மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழ் பாடத்தில் 69 பேர் 100 க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

இதற்கிடையே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வு ஜூன் 28 ம் தேதி துவங்கி ஜூலை 6 ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத்தேர்வுக்கு மே 31ம் தேதி முதல் ஜூன் 3 ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பம் கட்டணம் ரூ.175 ஐ மையங்களில் பணமாக செலுத்தலாம். துணைத்தேர்வுக்கு தனியாக பிரவுசிங் சென்டர் மூலம் விண்ணப்பிக்க முடியாது என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios