அரியலூர் 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

அரியலூர் மாவட்டம், அண்ணா சிலை அருகில், மாவட்ட 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், "2017-ஆம் ஆண்டு தமிழக அரசு வழங்கிய சம்பள உயர்வினை பிடித்தம் இல்லாமல் காலதாமதமின்றி முழுவதுமாக 108 அவசர ஊர்தி தொழிலாளர்களுக்கு, ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் வழங்க வேண்டும், 

அவசர ஊர்தியில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கு தங்கும் இட வசதி தனியாக ஏற்படுத்தி தர வேண்டும், 

அரியலூர் மாவட்டத்தில் பயன்பாட்டில் இருக்கும் பழுதான அவசர ஊர்தி வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.  

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.