போலி டாக்டர்களை பொறி வைத்து பிடித்த போலீஸ்.! 103 பேர் கைது-எந்த மாவட்டத்தில் அதிக போலி மருத்துவர்கள் தெரியுமா?
தமிழகம் முழுவதும் போல மருத்துவர்கள் மீதான புகார் வந்ததையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், தமிழ்நாடு முழுவதும் 103 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் போலி டாக்டர்கள்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிளினிக் அமைத்து போலி டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக புகார் எழுந்தது இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் 103 பேர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல், இந்தியமருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில்,
G Square : ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக தொடரும் சோதனை..! முக்கிய ஆவணங்கள் சிக்கியதா.?
18 நாளில் 103 பேர் கைது
மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது சுகாதாரத் துறை இணை இயக்குனர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும்படி அணைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். இதனையடுத்து. கடந்த 18 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் தமிழ்நாடு முழுவதும் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருவாரூரில் 12 பேரும், தஞ்சாவூர் மற்றும் சேலத்தில் 10 பேரும், திருவள்ளூரில் 9 பேரும், பெரம்பலூரில் 8 பேரும், திண்டுக்கல்லில் 6, தேனி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டையில் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்