18 வயது நிரம்பாத பெண்ணை திருமணம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உதகை நீதிமன்றம் தடலாடியாக தீர்ப்பளித்தது.
உதகையில் லவ்டேல் பகுதியைச் சேர்ந்தவர் கோகிலா. தோட்டத் தொழிலாளி. இவருடைய 14 வயது நிரம்பிய மகளுக்கும், சின்கோனா பகுதியைச் சேர்ந்த மனோஜ் (25) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், அவர்கள் இருவரும் 2015-ஆம் ஆண்டு அக்டோபரில் திருமணம் செய்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கோகிலா தனது மகளைக் காணவில்லை என உதகை நகர மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. சிறுமியைக் கடத்தித் திருமணம் செய்துகொண்ட மனோஜுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி சர்வமங்களா தீர்ப்பளித்தார்.
