Asianet News TamilAsianet News Tamil

ஒரு கிலோ மல்லிகைப் பூ 5500 ரூபாயா? உற்பத்தி பாதிப்பால் வரலாறு காணாத விலை ஏற்றம்...

1 kg jasmine flower 5500 rupees? price rise due to production impact ...
1 kg jasmine flower 5500 rupees? price rise due to production impact ...
Author
First Published Jan 22, 2018, 8:58 AM IST


கன்னியாகுமரி

தோவாளை மலர்ச் சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ. 5500-க்கு விற்கப்பட்டு வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை சந்தையில் பொங்கல் பண்டிகையின்போது கிலோ ரூ. 3000-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ, கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

அதிகப் பனிப் பொழிவு காரணமாக மல்லிகைப்பூ உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், பூக்களின் வரத்து குறைவாகவே இருந்தது.

இந்த நிலையில், மல்லிகைப்பூ காலம் காணாத வகையில் நேற்று கிலோ ரூ. 5500-க்கு விற்பனையானது. சனிக்கிழமை ரூ. 1250-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ அதிரடியாக ரூ.1600-ஆக உயர்ந்தது. மேலும், ரூ.800-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ.1300 ஆக விலை உயர்ந்தது.

சிவப்பு கேந்தி ரூ.90, ரோஜாப்பூ ரூ.250, கொழுந்து ரூ.120, சேலம் அரளி ரூ.130, தோவாளை அரளி ரூ.250 என்ற விலையில் மற்ற பூக்களும் விலையேற்றத்துடனே விற்கப்பட்டது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios